மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் அவர்கள் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது இந்தியக் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி & வளர்ச்சி ஆய்வகங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நிதியளிப்புத் திட்டங்களில் பாலின பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது பெண் விஞ்ஞானிகளுக்காக என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டதாகும்.
SERB என்பது அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (Science and Engineering Research Board) என்பதைக் குறிக்கின்றது.
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
POWER என்பது ஆய்வு ஆராய்ச்சியில் பெண்களுக்கான வாய்ப்புகளை ஊக்கப் படுத்துதல் (Promoting Opportunities for Women in Exploratory Research) என்பதைக் குறிக்கின்றது.