TNPSC Thervupettagam
March 25 , 2021 1219 days 538 0
  • ஹைதராபாத்தை சேர்ந்த தேசிய விலங்குகள் உயிரித் தொழில்நுட்ப நிறுவன (NIAB - National Institute of Animal Biotechnology) அறிவியலாளர் சோனு காந்தி SERB மகளிர் சிறப்பு விருதினைப் பெற்றுள்ளார்.
  • இவர் சமீபத்தில் முடக்குவாதம், இருதய நோய்கள் மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் (Japanese encephalitis) போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான ஒரு அதிதிறன் நானோ உபகரணத்தை வடிவமைத்துள்ளார்.
  • இந்த விருது அறிவியல் மற்றும் தொழில்நட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தினால் (SERB - Science and Engineering Research Board) தொடங்கப் பட்டது.
  • அறிவியல் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்கும் இளம் சாதனைப் பெண்மணிகளுக்கு இவ்விருது அங்கீகாரத்தையும் விருதினையும் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்