நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமானது மாலிப்டினம் டைசல்பைடின் கலப்புத் தன்மை கொண்ட இராமன் நிறப்பிரிகை (MoS2, ஒரு கனிமப் பொருள்) என்ற தங்க நானோ துகள்களுடன் மேற்பரப்பு – மேம்படுத்தப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஒரு நானோ அமைப்பை உருவாக்கியுள்ளது (SERS - Surface-Enhanced Raman Spectroscopy).
SERS என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு உணர்திறன் நுட்பமாகும். இதில் மூலக்கூறுகள் வெள்ளி (அ) தங்க நானோ துகள்கள் போன்ற நெளி உலோக மேற்பரப்புகளில் உறிஞ்சப்படும் போது அவை நெகிழ்வற்ற ஒளிச்சிதறலால் பெரிதும் மேம்படுகின்றன.
SERS கண்டறிதலானது அதன் மிக அதிக உணர்திறன் மற்றும் கைரேகை அங்கீகாரத் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறுப் பகுப்பாய்வின் கண்டறிதலுக்காக வளர்ந்து வரும் மிக வலிமை வாய்ந்த ஒரு கூறாக விளங்குகின்றது.