October 20 , 2024
12 days
95
- விண்வெளி சார் புத்தொழில் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா "ShakthiSAT" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது 108 நாடுகளில் சுமார் 12,000 சிறுமிகளுக்கு விண்வெளித் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிப்பதற்கான உலகளாவியத் திட்டமாகும்.
- இது இஸ்ரோவின் சந்திரயான்-4 என்ற திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள் ஏவுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டமானது உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு (14 முதல் 18 வயது வரை) 120 மணி நேர இயங்கலை வழி பயிற்சி வழங்குவதை உள்ளடக்கியுள்ளது.
- இது விண்வெளித் தொழில்நுட்பம், விண்கல கருவிப் பொருட்கள் உருவாக்கம் மற்றும் விண்கல அமைப்புகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கும்.
Post Views:
95