மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆனது SHe-Box இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
இது பணியிடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தலைச் சமாளிப்பது மற்றும் இந்தியா முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அரசு மற்றும் தனியார் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் குறித்து அறிக்கையளித்தல் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யும் செயல்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைக் கையாளும் உள்புறக் குழுக்கள் (IC) மற்றும் உள்ளூர் குழுக்கள் (LC) பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான ஒரு முக்கிய மையமாக இந்த இணைய தளம் செயல்படுகிறது.