TNPSC Thervupettagam
November 8 , 2017 2575 days 2489 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பான SHe Box எனும் ஆன்லைன் தளத்தை துவங்கியுள்ளது.
  • SHe Box – Sexual Harassment e-Box. பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான மின்புகார் பெட்டி.
  • பணியிடங்களில் பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் சார்பான புகார்களை அளிக்க அவர்களுக்கு இத்தளம் உதவும்.
  • இதற்கு முன்பு ஜூலை 2017-ல் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே  இத்தளம் தொடங்கப்பட்டது.
  • தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் பணியாளர்களும் பாலியல் தொல்லைகள் சார்பான புகார்களை தெரிவிக்கும் விதத்தில் இத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்தளமானது 2013-ன் பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டத்தை (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal Act, 2013) செயல்விளைவோடு நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும்.
  • இச்சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனமானது பெண் பணியாளர்களின் பாலியல் தொல்லைகள் சார்பான புகார்களை விசாரிக்க அதற்கென ஓர் விசாரணை உட்குழுவை அமைப்பது  (ICC – Internal Complaints Committee) கட்டாயமாகும்.
  • இத்தளத்தில் தாக்கல் செய்யப்படும் புகார்களானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ICC க்கு அனுப்பப்படும். அதன்மூலம் அப்புகார்களின் மீதான ICC-ன் செயல்பாட்டை   அமைச்சகத்தால் கண்காணிக்க  இயலும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்