இந்த வருடாந்திர நிகழ்வானது, அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) மற்றும் சுவீடன் நாட்டுத் தூதரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் புத்தாக்க அலுவலகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது அடுத்த தலைமுறையைப் பெருமளவில் ஊக்குவிப்பதோடு, அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஒரு நல்ல தொழில்முறை வாழ்க்கையைத் தொடர இளையோர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த ஆண்டிற்கான சவால், ஆற்றல் சேமிப்பு மற்றும் நிலைத் தன்மை மீது முக்கியக் கவனம் செலுத்துவதுடன், மிக முக்கியமான உலகளாவியச் சவால்களில் சிலவற்றை நேரடியாக எதிர்கொள்கிறது.
மின்கலத் தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் சேமிப்பு (BEST) அமைப்புகளில் கவனம் செலுத்தும் புதுமையான கருத்தாக்கங்களைச் சமர்ப்பிக்க நாடு முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இது அழைப்பு விடுக்கிறது.