நாசா சமீபத்தில் நியூ மெக்சிகோவிலுள்ள ஒயிட் சான்ட்ஸ் ஏவுகணை தளத்திலிருந்து (White Sands Missile Range)SHIELDS என்ற திட்டத்தினை விண்ணில் ஏவியது.
இது அயனிச்செறிவு மண்டலத்திலுள்ள (Heliosphere) நட்சத்திர மண்டலங்களுக்கு இடைப்பட்ட துகள்களிலிருந்து வெளிப்படும் ஒளியினை ஆய்வு செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
SHIELDS என்பது “Spatial Heterodyne Interferometric Emission Line Dynamics Spectrometer” ஆகும்.
இது 300 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கக் கூடியதாகும்.
இந்த உயரத்தில், சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் உள்ள துகள்களிலிருந்துவெளிப்படும் ஒளியினை SHIELDS திட்டம் ஆய்வு செய்ய இயலும்.