TNPSC Thervupettagam

SHREYAS திட்ட உதவித் தொகைகள்

February 15 , 2025 12 days 82 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (திவ்யாங்ஜன்) உதவித் தொகை வழங்குகிறது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான (SC) மிக இளம் சாதனையாளர்களின் உயர்கல்வி படிப்பிற்கான உதவித்தொகை (SHREYAS) திட்டம் என்பது ஒரு மத்திய அரசின் திட்டம் ஆகும்.
  • இது சமூக நீதி விவகாரங்கள் மற்றும் அதிகாரமளித்தல் துறையால் செயல்படுத்தப் படுகிறது என்பதோடு மேலும் இது 04 துணைத் திட்டங்களை உள்ளடக்கியது.
  • இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மற்றவர்களுக்கான SHREYAS திட்டமானது இரண்டு துணைத் திட்டங்களை உள்ளடக்கியது.
  • இந்த இரண்டில், OBC பிரிவினருக்கான தேசியப் புத்தாய்வு மாணவர் திட்டம் மட்டுமே ஓர் உதவித் தொகைத் திட்டமாகும்.
  • மாற்றுத்திறனாளிகள் துறையானது, இளம் சாதனையாளர்களின் உயர் கல்விக்கான உதவித் தொகை (SHREYAS) என்ற பெயரிலான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத் தவில்லை.
  • இருப்பினும், இந்தத் துறையானது, ஆறு துணைத் திட்டங்களை உள்ளடக்கிய 'மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை (திவ்யாங்ஜன்)' என்ற ஒரு முதன்மைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துத் திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் ஆகும்,  எனவே, மாநிலங்கள்/மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
  • இந்தத் திட்டங்கள் ஆனது இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன என்பதால், எந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்தத் திட்டங்களின் கீழ் பயனடையலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்