சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (The Small Industrial Development Bank – SIDBI) ஏப்ரல் 2, 2018 அன்று தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடியுள்ளது.
சம்பார்க் (இணைப்பு), சன்வாத் (தொடர்பு), சுரக்ஸா (பாதுகாப்பு) மற்றும் சம்பிரஷான் (பரவல்) ஆகியவற்றிற்கான தினமாக இத்தினம் கொண்டாடப் படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது MSME (Micro Small and Medium Enterprise) தொடர்பு நிகழ்ச்சி (Contact Programme); சம்ரிதி என்ற மெய்நிகர் உதவி; சீரமைக்கப்பட்ட SIDBI இணையதளம் (sidbi.in) மற்றும் வங்கித் திறன் கருவி (Bankability Kit) ஆகியவை தொடங்கப்பட்டன.
SIDBI ஆனது பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக ஏப்ரல் 2, 1990 அன்று ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, இது ஒரு சட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது.
SIDBI-ஐப் பற்றி
SIDBI ஆனது, இந்தியாவிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முன்னேற்றம், அவற்றிற்கு நிதியளித்தல் மற்றும் அவைகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கான முதன்மை மேம்பாட்டு நிதியியல் நிறுவனமாகும்.
MSME–களுக்கான நிதியளிப்பு வசதியை ஏற்படுத்துவதும், அவற்றை மேம்படுத்துவதும் மற்றும் நாடு முழுவதுமுள்ள MSME சூழலிலுள்ள நிதி மற்றும் மேம்பாட்டு இடைவெளியை சரி செய்வதும் SIDBI-யின் நோக்கங்களாகும்.
MSME–களுக்கான நிதியளிப்பு வசதியை ஏற்படுத்துவதும், அவற்றை மேம்படுத்துவதும் மற்றும் நாடு முழுவதுமுள்ள MSME சூழலிலுள்ள நிதி மற்றும் மேம்பாட்டு இடைவெளியை சரி செய்வதும் SIDBI-யின் நோக்கங்களாகும்.