TNPSC Thervupettagam
April 8 , 2018 2424 days 924 0
  • சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (The Small Industrial Development Bank – SIDBI) ஏப்ரல் 2, 2018 அன்று தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடியுள்ளது.
  • சம்பார்க் (இணைப்பு), சன்வாத் (தொடர்பு), சுரக்ஸா (பாதுகாப்பு) மற்றும் சம்பிரஷான் (பரவல்) ஆகியவற்றிற்கான தினமாக இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • இந்த நிகழ்ச்சியின் போது MSME (Micro Small and Medium Enterprise) தொடர்பு நிகழ்ச்சி (Contact Programme); சம்ரிதி என்ற மெய்நிகர் உதவி; சீரமைக்கப்பட்ட SIDBI இணையதளம் (sidbi.in) மற்றும் வங்கித் திறன் கருவி (Bankability Kit) ஆகியவை தொடங்கப்பட்டன.
  • SIDBI ஆனது பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக ஏப்ரல் 2, 1990 அன்று ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, இது ஒரு சட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது.

SIDBI-ஐப் பற்றி

  • SIDBI ஆனது, இந்தியாவிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முன்னேற்றம், அவற்றிற்கு நிதியளித்தல் மற்றும் அவைகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கான முதன்மை மேம்பாட்டு நிதியியல் நிறுவனமாகும்.
  • MSME–களுக்கான நிதியளிப்பு வசதியை ஏற்படுத்துவதும், அவற்றை மேம்படுத்துவதும் மற்றும் நாடு முழுவதுமுள்ள MSME சூழலிலுள்ள நிதி மற்றும் மேம்பாட்டு இடைவெளியை சரி செய்வதும் SIDBI-யின் நோக்கங்களாகும்.

  • MSME–களுக்கான நிதியளிப்பு வசதியை ஏற்படுத்துவதும், அவற்றை மேம்படுத்துவதும் மற்றும் நாடு முழுவதுமுள்ள MSME சூழலிலுள்ள நிதி மற்றும் மேம்பாட்டு இடைவெளியை சரி செய்வதும் SIDBI-யின் நோக்கங்களாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்