ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) என்ற நிறுவனமானது ஆயுதப் பரிவர்த்தனைகள் குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2020-2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உக்ரைன் இருந்தது.
2015-2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அந்நாட்டின் இறக்குமதி சுமார் 100 மடங்கு அதிகரித்துள்ளது.
உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சில முக்கிய ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்தும் (சுமார் 45 சதவீதம்), அதைத் தொடர்ந்து ஜெர்மனி (12 சதவீதம்) மற்றும் போலந்து (11 சதவீதம்) ஆகிய நாடுகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன.
அதே காலக் கட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
2015–19 மற்றும் 2020–24 ஆகிய சில ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 9.3 சதவீதம் குறைந்துள்ளது.
உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா தனது பங்கைச் சுமார் 43 சதவீதமாக அதிகரித்த அதே நேரத்தில் ரஷ்யாவின் ஏற்றுமதி 64 சதவீதம் குறைந்துள்ளது.
2020–24 ஆம் ஆண்டில் சீனா நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இருந்தது என்பதோடு இது உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 5.9 சதவீதமாகும்.