TNPSC Thervupettagam
March 17 , 2023 619 days 344 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஆனது 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் பற்றிய புதிய ஒரு தரவினை வெளியிட்டுள்ளது.
  • 2013-17 மற்றும் 2018-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11% குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 2012-16 மற்றும் 2017-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 21% குறைந்துள்ளது.
  • இருப்பினும், இந்தியா இன்னும் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக திகழ்கிறது.
  • கடந்த ஐந்தாண்டுகளில், உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு அதிக பட்சமாக 11% ஆக உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா (9.6%), கத்தார் (6.4%), ஆஸ்திரேலியா (4.7%) மற்றும் சீனா (4.7%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஒரு குறிப்பிட்ட ஆண்டில் கொள்முதல்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்து இந்தத் தரவரிசை முறையானது மாறும்.
  • பிரான்சின் ஆயுத ஏற்றுமதியானது, 2013-17 மற்றும் 2018-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 44% உயர்ந்துள்ளது.
  • இந்தியா, கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரான்சின் ஏற்றுமதியில் 30 சதவீதத்தினைப் பெற்றுள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில், உலக ஏற்றுமதியில் 40% பங்களிப்புடன் உலகின் முதன்மையான இராணுவ ஏற்றுமதி நாடாக அமெரிக்கா திகழ்கிறது.
  • அதைத் தொடர்ந்து ரஷ்யா (16%), பிரான்சு (11%), சீனா (5.2%) மற்றும் ஜெர்மனி (4.2%) ஆகிய நாடுகள் உள்ளன.
  • 2013-17 மற்றும் 2018-22 ஆகிய நாடுகளுக்கு இடையே அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி 14% உயர்ந்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் ரஷ்யாவின் ஏற்றுமதி 31% சரிந்தது.
  • இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ரஷ்யாவின் இறக்குமதி 37% குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் முக்கிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக உக்ரைன் திகழ்ந்தது.
  • ஆயுத இறக்குமதிகள், குறிப்பாக நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய ஆயுதங்களின் இறக்குமதிகள், தென் கொரியாவில் 61 சதவீதமும், ஜப்பானில் 171 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை எடுத்து உரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்