ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஆனது ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பின் நிலை பற்றிய ஒரு வருடாந்திர மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதம் கொண்ட ஒன்பது நாடுகளும் 2023 ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை நவீன மயமாக்குவதைத் தொடர்ந்தன என்பதோடு மேலும் பல நாடுகள் புதிய அணு ஆயுதம் அல்லது அணு சக்தி கொண்ட ஆயுத அமைப்புகளை பயன்பாட்டில் கொண்டு வந்தன.
அவை அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) மற்றும் இஸ்ரேல் ஆகியனவாகும்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதிப்பிடப்பட்ட 12,121 ஆயுதங்கள் அடங்கிய மொத்த உலகளாவிய இருப்புகளில், சுமார் 9585 சாத்தியமானப் பயன்பாட்டிற்காக இராணுவக் கையிருப்புகளில் இருந்தன.
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒருசேர சுமார் 90 சதவீத அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 410 இருந்த சீனாவின் அணு ஆயுத இருப்பானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 500 ஆக அதிகரித்தது.