TNPSC Thervupettagam
March 14 , 2025 17 days 91 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) என்ற நிறுவனமானது ஆயுதப் பரிவர்த்தனைகள் குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2020-2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உக்ரைன் இருந்தது.
  • 2015-2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அந்நாட்டின் இறக்குமதி சுமார் 100 மடங்கு அதிகரித்துள்ளது.
  • உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சில முக்கிய ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்தும் (சுமார் 45 சதவீதம்), அதைத் தொடர்ந்து ஜெர்மனி (12 சதவீதம்) மற்றும் போலந்து (11 சதவீதம்) ஆகிய நாடுகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன.
  • அதே காலக் கட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • 2015–19 மற்றும் 2020–24 ஆகிய சில ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 9.3 சதவீதம் குறைந்துள்ளது.
  • உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா தனது பங்கைச் சுமார் 43 சதவீதமாக அதிகரித்த அதே நேரத்தில் ரஷ்யாவின் ஏற்றுமதி 64 சதவீதம் குறைந்துள்ளது.
  • 2020–24 ஆம் ஆண்டில் சீனா நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இருந்தது என்பதோடு இது உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 5.9 சதவீதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்