TNPSC Thervupettagam
June 23 , 2024 7 days 198 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஆனது ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பின் நிலை பற்றிய ஒரு வருடாந்திர மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
  • அணு ஆயுதம் கொண்ட ஒன்பது நாடுகளும் 2023 ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை நவீன மயமாக்குவதைத் தொடர்ந்தன என்பதோடு மேலும் பல நாடுகள் புதிய அணு ஆயுதம் அல்லது அணு சக்தி கொண்ட ஆயுத அமைப்புகளை பயன்பாட்டில் கொண்டு வந்தன.
  • அவை அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) மற்றும் இஸ்ரேல் ஆகியனவாகும்.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதிப்பிடப்பட்ட 12,121 ஆயுதங்கள் அடங்கிய மொத்த உலகளாவிய இருப்புகளில், சுமார் 9585 சாத்தியமானப் பயன்பாட்டிற்காக இராணுவக் கையிருப்புகளில் இருந்தன.
  • ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒருசேர சுமார் 90 சதவீத அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 410 இருந்த சீனாவின் அணு ஆயுத இருப்பானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 500 ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்