மத்திய ஜவுளித்துறை (Ministry of Textiles) அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆடை அலங்கார தொழிற்நுட்ப நிறுவனம் (National Institute of Fashion Technology-NIFT) Size India எனும் தேசிய அளவீட்டு கணக்கெடுப்பை (National Sizing Survey) மேற்கொள்ள உள்ளது.
Size India திட்டமானது ஓர் அறிவியல் பூர்வ முயற்சியாகும் (Scientific Exercise). 6 முக்கிய இந்திய நகரங்களில் 15 முதல் 65 வரையிலான வயதுடைய 25,000 ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து உடை குறித்த மனித அளவீட்டுத் தரவுகள் (Anthropometric data) சேகரிக்கப்படும்.
இந்திய மக்கள் தொகையினுடைய உடல் அளவுகளின் (body measurements) அடிப்படையில் தயார் நிலையில் உடுத்த வல்ல ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு (Ready-to-Wear Industry) விரிவான ஆடை அளவு அட்டவணையை (Comprehensive size chart) உருவாக்குவதற்கு இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுவரை 14 நாடுகள் வெற்றிகரமாக தேசிய அளவீட்டுக் கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன.
கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ள ஆறு இந்திய நகரங்களாவன