TNPSC Thervupettagam
April 9 , 2018 2295 days 660 0
  • மத்திய ஜவுளித்துறை (Ministry of Textiles) அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  தேசிய   ஆடை அலங்கார தொழிற்நுட்ப நிறுவனம் (National Institute of Fashion Technology-NIFT) Size India எனும்  தேசிய  அளவீட்டு கணக்கெடுப்பை  (National Sizing Survey)  மேற்கொள்ள உள்ளது.
  • Size India திட்டமானது ஓர் அறிவியல் பூர்வ முயற்சியாகும் (Scientific Exercise). 6 முக்கிய இந்திய நகரங்களில் 15 முதல் 65 வரையிலான வயதுடைய 25,000 ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து உடை குறித்த மனித அளவீட்டுத் தரவுகள் (Anthropometric data) சேகரிக்கப்படும்.
  • இந்திய மக்கள் தொகையினுடைய உடல் அளவுகளின் (body measurements) அடிப்படையில் தயார் நிலையில் உடுத்த வல்ல ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு (Ready-to-Wear Industry) விரிவான ஆடை அளவு அட்டவணையை (Comprehensive size chart) உருவாக்குவதற்கு இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இதுவரை 14 நாடுகள் வெற்றிகரமாக தேசிய அளவீட்டுக் கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன.
  • கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ள ஆறு இந்திய நகரங்களாவன
    • கொல்கத்தா
    • மும்பை
    • புதுதில்லி
    • பெங்களூரு
    • ஹைதராபாத்
    • ஷில்லாங்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்