ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தீர்ப்புக்கு எதிரான வேதாந்தாவின் மனு குறித்து முடிவெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வஜீஃப்தார் தலைமையிலான 3 உறுப்பினர்கள் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
எஸ்.ஜே.வஜீஃப்தார் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பணியைத் தொடங்கி ஆறு வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.