ஜப்பானின் நிலவினை ஆய்வு செய்வதற்கான சீரான தரையிறக்க கலம் (SLIM) என்ற விண்கலம் ஆனது, சமீபத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
இந்த தரையிறங்கும் முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், ஓர் இயற்கையான செயற்கைக் கோளில் தானியக்க கலம் ஒன்று சீரான தரையிறக்கத்தினை மேற் கொள்ளும் ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறும்.
சிறிது நேரத்தை அங்கு செலவழிப்பதன் மூலம், SLIM கலம் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும்.
SLIM கலம் ஆனது, இந்த ஆண்டு நிலவில் சீரான முறையில் தரையிறங்குவதற்காக ஜப்பான் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சியாகும்.
ஐஸ்பேஸ் எனப்படும் ஜப்பானிய நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட HAKUTO-R M1 தரையிறங்கு கலம் ஆனது ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சிதைந்தது.