TNPSC Thervupettagam
January 24 , 2024 306 days 418 0
  • ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா, அதன் நிலவினை ஆய்வு செய்வதற்கான திறன் மிகு தரையிறங்கு கலம் (SLIM) நிலவில் தரையிறங்கியதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • எனினும் இந்த கலத்தில் உள்ள சூரிய மின்கலங்கள் இயங்காததால் அந்த விண்கலம் இன்னும் சூரிய சக்தியைப் பெறவில்லை.
  • இந்த தரையிறக்கமானது 2023 ஆம் ஆண்டில் நிலவில் சந்திரயான் -3 விண்கலத்தினை நிலவில் தரையிறக்கிய இந்தியாவிற்கு அடுத்தப் படியாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பானை மாற்றியுள்ளது.
  • இதர மற்ற நாடுகள் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியன ஆகும்.
  • தற்போது, இந்தக் கலம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கும் மின் கலத்தின் சக்தியில் இயங்குகிற நிலையில் இது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்