TNPSC Thervupettagam

SLIM நிலவு ஆய்வு திட்டம் – ஜப்பான்

September 3 , 2024 38 days 120 0
  • ஜப்பானின் விண்வெளி நிறுவனமான JAXA, அதன் ஆளில்லாத விண்கலத்துடனான தொடர்பை இழந்ததையடுத்து சந்திரனுக்கான அதன் தரையிறங்கு ஊர்தித் திட்டச் செயல்பாட்டை முடித்து கொண்டதாக அறிவித்துள்ளது.
  • சந்திரனை ஆய்வு செய்வதற்கான திறன்மிகு தரையிறங்கு ஊர்தி (SLIM) அல்லது "மூன் ஸ்னைப்பர்" எனும் இந்த கலன் அதன் தரையிறங்கும் ஒரு துல்லியத்திற்காகப் பெயர் பெற்றது.
  • இது எட்டு மாதங்களுக்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
  • இதன் மூலம் நிலவில் மெதுவாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
  • ஆனால் இந்த கலன், சந்திரனின் மேற்பரப்பில் தவறான கோணத்தில் தரை இறங்கியது, எனவே அதன் சூரிய ஒளி மின் உற்பத்திப் பலகைகள் தவறான திசையை எதிர்கொண்டன.
  • சூரியனின் கோணம் மாறியவுடன், SLIM கலன் இரண்டு நாட்களுக்குச் செயல்பட்டது.
  • அந்த நேரத்தில், அது உயர்-ரகப் புகைப்படக்கருவி மூலம் சந்திரனின் பள்ளம் பற்றிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்