இந்தியாவானது ஒடிஷாவின் வீலர் தீவிலிருந்து SMART (மீவளிவேகம் கொண்ட ஏவுகணையால் ஆதரவு பெற்ற நீர்மூழ்கிக் குண்டு) என்ற ஒன்றை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்த நிகழ்வானது கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் (மின் – ஒளியியல் அமைப்புகள், ரேடார்கள்) மற்றும் கீழ் நிலைக் கப்பல்கள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிலையங்கள் ஆகியவற்றினால் கண்காணிக்கப்பட்டது.
இது ஒரு நீர்மூழ்கிக் குண்டின் வரம்பிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்காக வேண்டி ஒரு ஏவுகணையால் ஆதரவு பெற்ற இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு நீர்மூழ்கிக் குண்டு அமைப்பாகும்.