TNPSC Thervupettagam
July 14 , 2022 740 days 588 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு, விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம், UNICEF, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து SOFI 2022 என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
  • SOFI என்பது "உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை" என்பதைக் குறிக்கிறது.
  • இந்தியாவில் அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு (மக்கள் தொகையில் சுமார் 16 சதவீதத்தினர்), வீணாக்குதல் (சுமார் 17 சதவீதத்தினர்), வளர்ச்சி குன்றிய நிலை (சுமார் 31 சதவீதத்தினர்) மற்றும் குறைந்த அளவில் பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே வழங்கும் நடைமுறை (58% மட்டுமே) உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் பசி, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் அனைத்து வடிவங்களிலுமான ஊட்டச்சத்துக் குறைபாட்டினை முடிவுக்குக் கொண்டு வருதல் என்ற இலக்கிலிருந்து உலகம் மேலும் விலகிச் செல்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் 828 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
  • உலகப் பொருளாதார மீட்சியைக் கருத்தில் கொண்டாலும் 2030 ஆம் ஆண்டளவில் 8 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டினி நிலையினை எதிர்கொள்வர்.
  • உணவுப் பாதுகாப்பின்மையில் நிலவும் பாலின இடைவெளியானது 2021 ஆம் ஆண்டில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
  • 27.6 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், உலகில் 31.9 சதவீதப் பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்