TNPSC Thervupettagam

SOFIA தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள்

March 20 , 2023 618 days 353 0
  • நிலவில் தண்ணீரின் பரவலைக் காட்டும் விரிவான வரைபடத்தினை உருவாக்கச் செய்வதற்கு அறிவியலாளர்கள் அகச்சிவப்பு வானியல் ஆய்விற்கான அடி வளி மண்டல ஆய்வுக் கலத்தினை (SOFIA) பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்தத் தொலைநோக்கியானது புவியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகள், இடை மண்டலம் மற்றும் தாழ் வெப்ப மண்டலம் ஆகியவற்றில் கனமான அணு நிலை ஆக்ஸிஜனைக் கண்டறிந்தது.
  • ஒரு ஆய்வகத்திற்கு வெளியே ஒரு கனமான ஆக்ஸிஜன் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • ஆக்ஸிஜன் 18 என்பது ஆக்ஸிஜனின் நிலையான ஐசோடோப்பு ஆகும்.
  • இதில் எட்டு புரோட்டான்கள் மற்றும் 10 நியூட்ரான்கள் உள்ளன.
  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில், பனி உருவாகும் ஒரு வெப்பநிலையைத் தீர்மானிப்பதற்கு ஆக்ஸிஜன்-18 பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்