பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் (NPOL) ஒலியியல் தன்மை மற்றும் மதிப்பீடு (SPACE) ஆகியவற்றிற்கான நீர்மூழ்குத் தளத்தைத் தொடங்கியது.
இது சோனார் அமைப்புகளுக்கான அதிநவீனச் சோதனை மற்றும் மதிப்பீட்டு வசதி ஆகும்.
இது கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கும் இந்தியக் கடற்படையின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
இதன் தனித்துவமானச் சிறப்பானது, சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நீர்மூழ்குத் தளமாகும்.
இவற்றினை ஒத்திசைவாக இயக்கப்படும் திருகு உருளை ஏற்றிகளைப் பயன்படுத்தி 100 மீட்டர் ஆழம் வரை இறக்க இயலும்.