TNPSC Thervupettagam
March 2 , 2018 2331 days 884 0
  • கலிபோர்னியாவின் வான்டென்பெர்க் விமானப்படைத் தளத்தில் உள்ள 4E விண்வெளி ஏவுதள வளாகத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space x) டின்டின் A (Tintin A / மைக்ரோசாட் -2a) மற்றும் டின்டின் B (Tintin B / மைக்ரோசாட் 2b) எனும் இரு சோதனை செயற்கைக் கோள்களுடன் பாஸ் விண்வெளி திட்ட (Paz Mission) செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • பால்கான் 9 (Falcon 9) எனும் மறுசுழற்சிப் பயன்பாட்டு இராக்கெட் (Recycled) மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space x) இந்தத் திட்டத்திற்கான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
  • இவ்விரு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சரியான இடத்தில் நிலை நிறுத்தப்பட்டால் இவை நட்சத்திரக் கூட்டிணைவு (Star Link) அமைப்பை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கும்.
  • உலகம் முழுவதும் மலிவான, அதிவேகமான  இண்டர்நெட் இணைப்பு வசதியை  உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் திரளே (Satellite constellation) Star link  ஆகும்.

  • Star link அமைப்பானது கீழான புவிச் சுற்றுப்பாதை (Low Earth orbit-LEO) மற்றும் மிகவும் கீழான புவிச்சுற்றுப்பாதை (Very Low Earth orbit-VLEO) என இரு விண்வெளி அடுக்குகளில் சுமார் 12,000 சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது.
  • எல்லைக் கட்டுப்பாடு, புலனாய்வு வேலைகள், இராணுவ செயல்பாடுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட  ஸ்பானிய ரேடார் இமேஜிங் செயற்கைக் கோளைக் கொண்டது பாஸ் திட்டமாகும் (Paz mission).
  • கீழான புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள் திரளானது உலகம் முழுவதும் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க வல்லது.
  • மிகவும் கீழான புவிச்சுற்றுப் பாதையில் உள்ள செயற்கைக்கோள் திரளானது  இணைய வேகத்தின் திறனை (capacity)  அதிகரிக்க உதவும்.
  • 2016 -ஆம் ஆண்டின் நீடித்த மேம்பாட்டிற்கான ஐ.நா. பிராட்பேண்ட் கமிஷன் அறிக்கைப்படி (UN Broadband Commission for Sustainable Development) உலகின் மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதத்தினர் இணையப் பயன்பாடில்லாது (Offline) உள்ளனர்.
  • கீழான புவி சுற்றுப்பாதையில்  உள்ள செயற்கைக்கோள்களானது ka,Ku,V  போன்ற அதிர்வெண் பட்டைகளில் செயல்படுகின்றன.
  • மிகவும் கீழான புவிச் சுற்றுப்பாதையில்  உள்ள செயற்கைக்கோள்கள் V அதிர்வெண் பட்டைகளில் (V band) செயல்படுகின்றன.
  • கீழான புவிச் சுற்றுப்பாதையானது பூமிக்கு மேற்புறத்தில் 1110 முதல் 1325 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் சுற்று வட்டப் பாதையாகும்.
  • மிகவும் கீழான புவிச் சுற்று பாதையானது பூமிக்கு மேற்புறத்தில்  335 – 346 கிலோ மீட்டர்  உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்