TNPSC Thervupettagam

SPADEX இணைப்புத் திட்டம்

October 25 , 2024 28 days 99 0
  • அடுத்து எதிர் காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள SPADEX – விண்வெளி கல இணைப்பு சோதனை எனப்படும் முக்கிய திட்டத்தின் ஒரு பகுதியாக 400கிலோ கிராம் எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களை இஸ்ரோ பெற்றுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள்கள் மணிக்கு சுமார் 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் நன்கு பயணித்து, ஒரு 'விண்வெளி இணைவு' மற்றும் ஒற்றைச் சுற்று கல அமைப்பினை உருவாக்கக் கூடிய வகையில் துல்லியமாக அவற்றை இணைத்துக் கொள்ளும்.
  • அனந்த் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ATL) என்ற ஒரு நிறுவனமானது, இஸ்ரோ நிறுவனத்திற்காக சுமார் 400 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் செயல்முறையினை தயார் செய்துள்ளது.
  • இஸ்ரோ தனது செயற்கைக்கோள்களை ஓர் இந்திய தனியார் துறை நிறுவனத்தினால் முழுமையாக ஒருங்கு சேர்த்து, ஒருங்கிணைத்து, ஒரு தனியார் சோதனைத் தளத்தில் சோதனை செய்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்