மீகுளிர் செந்நிற குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் புதிய பூமி அளவிலான கிரகத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
SPECULOOS-3b என்று அழைக்கப்படும் இது பூமியிலிருந்து சுமார் 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இது ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு முறை செந்நிற குள்ள நட்சத்திரத்தினைச் சுற்றி வருகிறது என்பதோடு இது இந்தக் கிரகத்தில் ஓர் ஆண்டினைப் பூமியில் ஒரு நாளிற்கும் குறைவான காலம் கொண்டதாக மாற்றுகிறது.
மேலும், இதில் வளிமண்டல அமைப்பு காணப்படவில்லை மற்றும் இதன் சுற்றுச்சூழல் நிலைமைகளில் பூமியை விட பெரிய வேறுபாடுகள் காணப்படுகிறது.