தீவிரமான உயர்மட்ட பகுதிகளில் பணிபுரியும் வீரர்களுக்கும் அப்பகுதிகளிலுள்ள கோவிட் – 19 நோயாளிகளுக்கும் SpO2 அடிப்படையிலான துணைநிலை ஆக்சிஜன் வழங்கீட்டு அமைப்பு ஒன்றினைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
இந்தத் தானியங்கி அமைப்பானது SpO2 (செறிவூட்டப்பட்ட இரத்த ஆக்சிஜன் நிலை) அளவின் அடிப்படையில் துணைநிலை ஆக்சிஜனை வழங்கி பெரும்பாலான சூழ்நிலையில் இறப்பினை ஏற்படுத்தும் ஆக்சிஜன் குறைபாட்டு நிலையை (ஹைப்பாக்சியா) நோயாளிகள் அடையாமல் தடுக்கிறது.
ஹைப்பாகிசியா என்பது திசுக்களை அடையும் ஆக்சிஜனின் அளவு உடலின் அனைத்து ஆற்றல் தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாமல் இருக்கும் ஒரு நிலையாகும்.