மேக்ஸ் பிளாங்க் வானியற்பியல் நிறுவனத்திலுள்ள வானியலாளர்கள் “SPT0418-47” எனப்படும் ஒரு குழந்தை அண்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், பால்வழி அண்டத்தைப் போல தோற்றமளிக்கிறது.
இது பால்வழி போன்ற சுழல் கைகளைக் கொண்டிருக்க வில்லை, ஆனால் ஒரு சுழலும் வட்டு மற்றும் பால்வீதியை ஒத்த ஒரு வீக்கம் (bulge) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அந்த வானியலாளர்கள் குழுவானது அட்டகாமா பெரிய மில்லிமீட்டர் / துணை மில்லி மீட்டர் வரிசை (அல்மா) என்ற தொலைநோக்கி உடன் ஒளியை ஈர்ப்பு விசை வளைக்கும் என்ற கோட்பாட்டை (gravitational lensing concept) பயன்படுத்தியது.