தென் சீனக் கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் ராணுவக் கூட்டணியில் இந்தியா விரைவில் இணைய உள்ளது.
SQUAD கூட்டணியானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக என உளவுத் துறை பரிமாற்றம் மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவாரத்தையில் (குவாட்) உறுப்பினராக உள்ளது.