TNPSC Thervupettagam

SSA திட்டம் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு

April 2 , 2025 8 hrs 0 min 42 0
  • PM Shri என்ற திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத சில மாநிலங்களுக்கு SSA நிதி வெளியிடப்படாதது குறித்து இக்குழு சிறப்புக் கவனத்தினை செலுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மொத்த நிதியானது, மேற்கு வங்காளத்திற்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும், கேரளாவிற்கு 859.63 கோடி ரூபாயாகவும், தமிழ்நாட்டிற்கு 2,152 கோடி கோடி ரூபாயாகவும் உள்ளது.
  • சமக்ர சிக்சா அபியான் (SSA) என்ற திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை வழங்க பாராளுமன்ற நிலைக் குழுவானது பரிந்துரைத்துள்ளது.
  • PM SHRI என்பது தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பள்ளித் திட்டமாகும் என்பதோடு. SSA என்பது NEP இலக்குகளை அடைவதற்கான ஒரு திட்டமாகும்.
  • 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆனது, 33 PM SHRI பள்ளிகளை நிறுவச் செய்வதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தத் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன.
  • 2024-25 ஆம் நிதியாண்டில், மத்திய அரசு ஆனது 2,152 கோடி ரூபாய் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன், தமிழ்நாடு SSA திட்டத்திற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்