ஜெய்ப்பூரில் இரண்டு இருதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக இந்திய மருத்துவர்கள் முதன்முறையாக தொலைதூரத்தில் இருந்து இயக்கக்கூடிய ஒரு எந்திர அமைப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.
SSI மந்த்ரா எனப்படுகின்ற இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அறுவைச் சிகிச்சை எந்திர அமைப்பு இதுவாகும்.
இது சுமார் 286 கிலோ மீட்டர் தூரத்தில் தொலை தூரக் கட்டுப்பாடு மூலமான அறுவை சிகிச்சை மூலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் ஒன்றும், ஜெய்ப்பூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் மற்றொன்றும் என இரண்டு எந்திர அமைப்புகள் மூலமான இருதய அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.
உள் மார்பக தமனி அகற்றல் செயல்முறை மற்றும் இதயத் துடிப்பினை ஒத்திசைந்த வகையிலான முழுமையாக உள்நோக்கியியல் கருவி சார்ந்த இருதய தமனிகளுக்கு இடையேயான திசைமாற்ற அறுவைச் சிகிச்சையான (TECAB) இரண்டுமே இருதய அறுவைச் சிகிச்சைகள் ஆகும்
இந்த வகையில் இம்மாதிரியான ஒரு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது உலகிலேயே முதல் முறையாகும்.
SSI மந்த்ரா 3 என்பது எந்திரவியல் அறுவைச் சிகிச்சை அமைப்பு என்பது தொலை தூரக் கட்டுப்பாடு மூலமான ஒரு அறுவைச் சிகிச்சை மற்றும் மிக தொலைதூரக் கண்காணிப்புகளுக்கான ஒழுங்குமுறை சார்ந்த ஒப்புதலைப் பெற்ற உலகின் ஒரே எந்திரவியல் அமைப்பு ஆகும்.
இது மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் (CDSCO) அங்கீகரிக்கப் பட்டதாகும்.
மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆனது, இந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தில் உள்ள சுகாதாரச் சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) கீழ் செயல்படுகிறது.