TNPSC Thervupettagam
February 13 , 2023 524 days 345 0
  • இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (SSLV) ஆனது, EOS-07 எனப்படும் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைக் கோள்களை அவற்றிற்காக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது.
  • 156.3 கிலோ எடையுள்ள EOS-07 செயற்கைக் கோளின் பணி ஆயுட்காலம் ஓராண்டு ஆகும்.
  • SSLV ஆனது சிறிய-குறுகிய அல்லது நுண்ணிய செயற்கைக் கோள்களை (10 முதல் 500 கிலோ எடை கொண்ட) 500 கி.மீ. கோள்களின் சுற்றுப் பாதையில் செலுத்தும் திறன் கொண்டது.
  • SSLV என்பது அனைத்துத் திடநிலை உந்துவிசை நிலைகளையும் கொண்ட மூன்று எரி பொருள் நிலையிலான ஏவுதல் வாகனமாகும்.
  • SSLV வாகனத்தின் வடிவமைப்புக் காரணிகள் குறைந்த விலை, குறைவான புவிக்குத் திரும்பும் நேரம், பல செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லக் கூடிய வகையிலான மற்றும் குறைந்தபட்ச ஏவுதல் உள்கட்டமைப்புத் தேவைகள் ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்