TNPSC Thervupettagam
August 22 , 2024 93 days 188 0
  • இஸ்ரோ நிறுவனமானது EOS-08 எனப்படும் புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (SSLV)-D3 மூலம்  விண்ணில் ஏவியுள்ளது.
  • SSLV-D3 ஆனது அதன் மூன்றாவது மற்றும் இறுதி மேம்பாட்டு விமானமாகும்.
  • SSLV ஆனது சிறிய, குறுகிய அல்லது நுண் செயற்கைக்கோள்களை (10 முதல் 500 கிலோ எடை) 500 கிலோ மீட்டர் தொலைவிலான புவி தாழ் மட்ட சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது.
  • புவிக் கண்காணிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள EOS-08 செயற்கைக்கோள் ஆனது, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு பணிகளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
  • அகச்சிவப்புக் கதிர் சூழல்களில் படங்களைப் பிடிக்கவும், புற ஊதா கதிர்வீச்சைக் கண்காணிக்கவும், மண்ணின் ஈரப்பதம் மற்றும் பெருங்கடல் காற்றையும் அளவிடக் கூடிய பல கருவிகள் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்