ஆஸ்திரேலியா, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது AUKUS எனப்படும் முத்தரப்புப் பாதுகாப்பு கூட்டாண்மையினை மேற்கொண்டுள்ளன.
இது ஆஸ்திரேலிய நாட்டின் கடற்படைக்கு அணுசக்தி மூலம் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
AUKUS கூட்டாண்மை குறித்து முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSNs) அடங்கிய நாட்டின் புதிய கடற்படையை உருவாக்குவதில், BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆஸ்திரேலியாவின் ASC நிறுவனத்தினை ஆஸ்திரேலிய நாட்டு அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.