சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியம் (IUCN) ஆனது இனங்களின் அச்சுறுத்தல் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு (STAR) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பெருங்கடல்களில் உள்ள பல்லுயிர் இழப்பைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் நிலப்பரப்பு பகுதிகளில் பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
STAR, உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த இலக்குகளை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றத்தை அளவிட உதவுகிறது என்பதோடு வளங்காப்பு முயற்சிகளில் அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் அமைப்புகளின் மீது முடிவெடுத்தல் என்ற நடவடிக்கையில் ஆதரவளிக்கிறது.