தொற்றாத நோய்களின் (NCD) ஆபத்து காரணிகளின் பரவலை மதிப்பிடுவதற்கான தமிழ்நாடு STEPS ஆய்வு-2 தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இது NCD ஆபத்துக் காரணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை உருவாக்க மாநில அரசிற்கு உதவும்.
2020 ஆம் ஆண்டு STEPS கணக்கெடுப்பு ஆனது, தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடையே உயர் இரத்த அழுத்த பாதிப்பில் 33.9 சதவீதமும், நீரிழிவு நோயில் 17.6 சதவீத சமூக அளவிலானப் பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் (7.3%) மற்றும் நீரிழிவு நோய் (10.8%) ஆகியவற்றிற்கான கட்டுப்பாடு விகிதத்தினையும் பதிவு செய்து உள்ளது.
இதற்கு முந்தைய மதிப்பீட்டில் நீரிழிவு நோய்க்கான கட்டுப்பாட்டு விகிதம் 10.8% ஆக கண்டறியப்பட்டது.
நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டு விகிதத்தை 10.8 சதவீதத்திலிருந்து 16.8% ஆகவும், உயர் இரத்த அழுத்தத்தின் கட்டுப்பாட்டு விகிதத்தினை 7.3 சதவீதத்திலிருந்து 10.3% ஆகவும் அதிகரிப்பதே அரசின் இலக்காக இருந்தது.