TNPSC Thervupettagam
August 21 , 2023 333 days 175 0
  • “Still Unprepared" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் அதிகரித்துள்ள போதிலும், பருவநிலை இடர்களை மதிப்பிடுதல், மேலாண்மை செய்தல் மற்றும் தணிப்பு ஆகிய நடவடிக்கைகளில் இந்திய வங்கித் துறையின் தயார் நிலையில் சில குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதை இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இந்தியாவின் 34 பெரிய வங்கிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கான தயார் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 365 நாட்களில் 314 நாட்கள் தீவிரமான வானிலை சார்ந்த இடர்கள் ஏற்பட்டுள்ளன.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான சில நடவடிக்கைகளுக்கான தயார்நிலையில், யெஸ் வங்கி, HDFC வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
  • 10 வங்கிகள் மட்டுமே தங்களது பசுமை நிதிசார் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகள் அளித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்