TNPSC Thervupettagam

STSS தொற்றுகள் அதிகரிப்பு – ஜப்பான்

June 20 , 2024 157 days 192 0
  • நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட கொடிய தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து ஜப்பான் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
  • இந்த நோயானது ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) அல்லது ‘சதை உண்ணும் பாக்டீரியா’ என அழைக்கப்படுகிறது.
  • இது வேகமாகப் பரவி, குறுகிய காலத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
  • STSS என்பது A குழும ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவினால் ஏற்படும் அரிதான அதே சமயம் தீவிரமான பாக்டீரியத் தொற்று ஆகும்.
  • இந்தப் பாக்டீரியாக்கள் ஆழமான திசுக்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடலில் விரைவான மற்றும் ஆபத்தான எதிர் வினைகளை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியிடுவதால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்