மறைந்த தமிழக முன்னாள் முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சியின்போது , வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை இந்தியப் பிரதமர் துவங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஓர் பகுதியாக, ஒவ்வொரு பயனாளரும் இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதத்தை மானியமாகப் பெறுவர் அல்லது ரூபாய் இருபத்து ஐந்தாயிரத்தை மானியமாகப் பெறுவர்.
ஒவ்வொரு ஆண்டும், வேலைக்குச் செல்லும் சுமார் ஒரு லட்சம் மகளிர் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற உள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஜெ. ஜெயலலிதா அவர்களால் இந்த மானிய விலையிலான “அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” தேர்தல் அறிவிக்கையாக அறிவிக்கப்பட்டது.