TNPSC Thervupettagam

மானிய விலையிலான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்

March 2 , 2018 2330 days 839 0
  • மறைந்த தமிழக முன்னாள் முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சியின்போது , வேலைக்குச் செல்லும்  பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும்  திட்டத்தை இந்தியப் பிரதமர் துவங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் ஓர் பகுதியாக, ஒவ்வொரு பயனாளரும் இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதத்தை மானியமாகப் பெறுவர் அல்லது ரூபாய் இருபத்து ஐந்தாயிரத்தை    மானியமாகப் பெறுவர்.
  • ஒவ்வொரு ஆண்டும், வேலைக்குச் செல்லும் சுமார் ஒரு லட்சம் மகளிர் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற உள்ளனர்.
  • கடந்த சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஜெ. ஜெயலலிதா அவர்களால் இந்த மானிய விலையிலான  “அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” தேர்தல்  அறிவிக்கையாக  அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்