அதி அழுத்த ஊதற்பை வழி (பலூன்) ஆய்வுத் தொலைநோக்கியானது (SuperBIT), நாசாவின் ஹீலியம் நிரப்பப்பட்ட அறிவியல்சார்ந்த பலூன் மூலம் விண்வெளியின் விளிம்புப் பகுதி வரை சென்றது.
இது படை மண்டல ஆய்வுக் கருவியின் முதல் செயல்பாட்டுச் சோதனையாகும்.
இது இந்த ஆய்வுப் பயணத்தில் "டரான்டுலா நெபுலா" எனப்படும் நமது பால்வெளி அண்டத்திற்கு அருகிலுள்ள ஓர் அண்டத்தின் ஒரு பிரகாசமான வாயு மற்றும் தூசிப் படலத் திரளினைக் காட்டும் தனது முதல் படங்களைப் பதிவு செய்தது.
இது "ஆன்டெனா" என்று அழைக்கப்படும் NGC 4038 மற்றும் NGC 4039 ஆகிய இரண்டு அண்டங்களுக்கு இடையிலான மோதலையும் படம் பிடித்தது.