கான்பூர் மற்றும் ஹைதராபாதில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் இந்தியாவில் கோவிட் பற்றிய தரவுகளைக் கணிப்பதற்காக, “எளிதில் பாதிக்கப்படக் கூடிய, கண்டறியப்படாத, சோதிக்கப்பட்ட (நேர்மறை) மற்றும் நீக்கப்பட்ட அணுகுமுறை” (Susceptible, undetected, Tested (positive) and Removed Approach- (SUTRA) எனும் ஒரு மாதிரியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மாதிரியானது பெருந்தொற்றின் போக்கினைக் கணிப்பதற்காக மூன்று முக்கிய அளவுருக்களைப் பயன்படுத்துகிறது.
முதலாவது அளவுருவானது ஒரு நாளைக்கு எத்தனை நபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கணக்கிடும் பீட்டா (அ) தொடர்பு வீதமாகும் (beta or contact rate).
இது தொற்று ஏற்பட்ட நபர்கள் தங்களது நோய்த் தொற்று காலங்களில் எத்தனை நபர்களுக்கு வைரஸைப் பரப்புகின்றனர் என்பதை அளவிடும் RO என்ற மதிப்புடன் தொடர்புடையதாகும்.
இரண்டாவது அளவருவானது பெருந்தொற்றினால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகின்றனர் என்பதை கணக்கிடும் “எல்லை (reach)” என்பதாகும்.
மூன்றாவது அளவுருவானது கண்டறியப்பட்ட மற்றும் கண்டறியப்படாத தொற்றுகளுக்கிடைப்பட்ட விகிதமான எப்சிலான் (epsilon) என்பதாகும்.