TNPSC Thervupettagam

SVAMITVA திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள்

December 29 , 2024 61 days 105 0
  • தற்போது SVAMITVA திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்காக 1.37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிராமப்புற குடியிருப்புச் சொத்துக்களை கடன் மூலம் பணமாக்க இயலும்.
  • இந்த முன்னெடுப்பானது, ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கிராமப் புறங்களில் உள்ள சொத்துக்களை மதிப்பாய்வு செய்தல்/கணக்கெடுத்தல் மற்றும் எல்லை நிர்ணயம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
  • இது கிராமங்களின் பொருளாதார ஆற்றலை வெளிக் கொணர்ந்து, அங்கு உள்ள நிதி உள்ளடக்கத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SVAMITVA (கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்டத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு கிராமங்களை வரைபடமாக்கல்) என்ற திட்டம் ஆனது 2020 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • இதுவரையில், சுமார் 317,000 கிராமங்கள், அதாவது 344,000 கிராமங்கள் என்ற மொத்த இலக்கில் 92% கிராமங்கள் கணக்கெடுக்கப் பட்டு, 136,000 கிராமங்களில் மக்கள் தங்கள் சொத்து அட்டைகளைப் பெற்றுள்ளனர்.
  • தமிழ்நாடு, பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள், தம் சொந்தத் திட்டங்கள் மூலம் கிராமப் புற நிலப் பதிவேடுகளைப் புதுப்பித்துள்ள நிலையில், இந்தத் திட்டத்திலிருந்து விலகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்