TNPSC Thervupettagam
July 23 , 2024 41 days 236 0
  • PM SVANidhi திட்டத்தில் 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம்' பிரிவின் கீழ் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • நகர்ப்புறத் தெருவோர வியாபாரிகளுக்கான இந்த நுண்கடன் திட்டம் ஆனது 50,000 ரூபாய் வரையிலான பிணையில்லா கடன்களை வழங்குகிறது.
  • 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் - புத்தாக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகள் விருது' பிரிவில் அசாம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் - பெருநகரம் மற்றும் மில்லியன் பிளஸ் நகரங்களில் கடன் வழங்கீட்டுச் செயல்திறன்' பிரிவில், டெல்லி மாநகராட்சி (MCD) முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதைத் தொடர்ந்து ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) மற்றும் அகமதாபாத் மாநகராட்சிக் கழகம் ஆகியவை உள்ளன.
  • தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் (DAY-NULM) சிறந்த செயல் திறனுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
  • முறை சார் முற்போக்கு குறித்தப் பகுப்பாய்வு சார்ந்த நிகழ் நேர தரவரிசையில் (SPARK) கேரளா முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்