PM SVANidhi திட்டத்தில் 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம்' பிரிவின் கீழ் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
நகர்ப்புறத் தெருவோர வியாபாரிகளுக்கான இந்த நுண்கடன் திட்டம் ஆனது 50,000 ரூபாய் வரையிலான பிணையில்லா கடன்களை வழங்குகிறது.
'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் - புத்தாக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகள் விருது' பிரிவில் அசாம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் - பெருநகரம் மற்றும் மில்லியன் பிளஸ் நகரங்களில் கடன் வழங்கீட்டுச் செயல்திறன்' பிரிவில், டெல்லி மாநகராட்சி (MCD) முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) மற்றும் அகமதாபாத் மாநகராட்சிக் கழகம் ஆகியவை உள்ளன.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் (DAY-NULM) சிறந்த செயல் திறனுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
முறை சார் முற்போக்கு குறித்தப் பகுப்பாய்வு சார்ந்த நிகழ் நேர தரவரிசையில் (SPARK) கேரளா முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் இடம் பெற்றுள்ளன.