மத்திய நிதிநிலை அறிக்கையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவான வீட்டு வசதி வழங்கும் சிறப்பு திட்ட நிதியின் (SWAMIH) கீழான இரண்டாவது தவணையாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு லட்சம் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கு என்று உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
SWAMIH நிதியானது, நிதி அமைச்சகத்திடமிருந்து நிதியினைப் பெறுகிறது.
இது நிதி நெருக்கடியில் உள்ள மற்றும் மிகவும் முன்னதாக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் பட்ட குடியிருப்புச் சொத்துகளுக்கான கடன் நிதியளிப்பிற்காக என்று உருவாக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SWAMIH நிதியானது, ஸ்டேட் வங்கி குழுமத்தின் நிறுவனமான SBICAP வென்ச்சர்ஸ் லிமிடெட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
SWAMIH நிதியின் முதல் தவணையின் கீழ், இது வரையில் சுமார் 15,500 கோடி ரூபாய் திரட்டப் பட்டுள்ளது.
மிக மலிவான, நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதிப் பிரிவுகளில் உள்ளடங்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் வீட்டு மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தினால் (RERA) பதிவு செய்யப்பட்ட குடியிருப்புத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக இந்த நிதியின் கீழ் முன்னுரிமை கடன் வழங்கப் படும்.
இந்த நிதியைப் பெறுவதற்கு, அவற்றின் நிகரச் சொத்து மதிப்பு கடன் மதிப்பினை விட அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதை உறுதி செய்ய கடைசி கட்ட நிதிக்கு மட்டும் தேவை இருக்க வேண்டும்.