மத்திய அரசானது, SWATI (பெண்களுக்கான அறிவியல் - தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்) என்ற இணைய தளத்தினை தொடங்கியுள்ளது.
இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) மற்றும் மருத்துவத் துறைகளில் இந்தியப் பெண்களின் சாதனைகளை எடுத்துரைக்கும் தரவு தளத்தைக் கொண்டுள்ளது.
அறிவியல் துறையில் உள்ள பாலின இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NIPGR) இந்த ஊடாடும் வகையிலான இணைய தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளமானது, அறிவியலில் கல்வித் துறை மற்றும் தொழில்துறைகளில் ஈடுபடுவதற்குப் பெண்களை ஊக்குவிக்க முயல்கிறது.